வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Wednesday, February 17, 2010

அவல் உப்புமா.....

அவல் உப்புமா.....





அவல் என்றதும் நமது நினைவுக்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான்.... அவல் வைத்து உப்புமா செய்வது எப்பிடி என்று பார்போம் .....
விருந்தாளி யாராவது தீடிர்னு வீட்டுக்கு வந்து விட்டால் அவர்களுக்கு சாப்பிட குடுக்க எதுவும் இல்லை என்று கவலை பட வேண்டாம்...
தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் : 1 கப்
நறுக்கிய வெங்காயம் : 1/4 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் : 2
மஞ்சள் பொடி : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
வருத்த நிலக்கடலை : 1/2 கையளவு
கரிவேபில்லை : 1 அல்லது 2 இலை
எலுமிச்சம்பழம் : 1
ஓமபொடி : கொஞ்சம்
கடுகு உளுந்தம் பருப்பு கலவை கொஞ்சம்
செய்முறை:
1.வானலியில் சூடேறியதும் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தம் பருப்பு கலவை எடுத்து கொஞ்சம் தாளிக்க வேண்டும்
2.பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கியபின் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
3.வெங்காயம் வதக்கி கொண்டு இருக்கும் போது அவல்ல எடுத்து கொஞ்சமாக தண்ணிர் விட்டு ஊற விட வேண்டும்
4.தற்சமயம் மஞ்சள் பொடி எடுத்து வானலியில் போடவும், பிறகு ஊற வைத்த அவல்ல எடுத்து அதில் சேர்த்து கிளறவும்
5.உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறவும்
6.ஒரு நிமிடம் கழித்து வறுத்த நிலக்கடலை சேர்த்து ஒரு முறை கிளறவும் 7.கொஞ்சமாக பச்சை கொத்தமல்லி, கரிவேபில்லை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும்
8.சுவையான அவல் உப்புமா ரெடி.........
9.தட்டில் சுட சுட எடுத்து வைத்து கொஞ்சம் ஓமபொடியை மேல தூவி, நான்காக நறுக்கிய எலுமிச்சம்பழத்தை இரண்டு துண்டு எடுத்து வைத்து விருந்தாளி கையில் கொடுத்து பாராட்டு பத்திரத்தை பெற்று கொள்ளுங்கள்......
அவல் உப்புமா செய்து பார்த்து தங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.........

4 comments:

  1. நண்பரே என் மாப்ள யூர்கனுக்கு "அவள் " உப்புமா பண்ணித்தந்தால் ஆள் அம்பேலாகி விடுகிறது!
    ஒரு வேல உங்க உப்புமா பிடிக்கும் போல.

    ReplyDelete
  2. சரவணா ...உப்புமா கம்பனில வேல செஞ்சுகிட்டே உப்புமாவை பத்தி பதிவு போடறே,,,
    என்ன ஒரு பொருத்தம் ???

    சூப்பர் போ !!

    ReplyDelete
  3. //யூர்கன் க்ருகியர் said...
    சரவணா ...உப்புமா கம்பனில வேல செஞ்சுகிட்டே உப்புமாவை பத்தி பதிவு போடறே,,,
    என்ன ஒரு பொருத்தம் ??? ///

    எல்லாம் நீங்க சொல்லி குடுத்து தான்.........
    நீங்க என்ன மீன் குழம்பு வைக்குற கம்பன்ய்லேயா வேல பாக்குறீங்க.......
    உப்புமா வேணுமா வேண்டாமா.........

    ReplyDelete