வாரும் வாரும்.... வந்து பார்த்துட்டு உங்கள் கருத்த சொல்லிட்டு போங்க...






Tuesday, July 27, 2010

நீங்க அழகா

நீங்க குள்ளமா இருக்கீங்களா ?

அல்லது ரொம்ப உயரமா இருக்கீங்களா ?

நீங்க குண்டா இருக்கீங்களா ?

அல்லது ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா ?

கவலைய விடுங்க .....

என்னடா லேகியம் விக்கறேன்னு பாக்கறீங்களா.....

அதெல்லாம் இல்லீங்க....

உண்மையா உங்க கவலைய முழுசா போக்க முடியலைன்னாலும் பாதியாவாவது குறைக்கலாம்னு முடிவு பண்ணி உங்களுக்காக இத கை வலிக்க டைப் பண்ணியிருக்கேன்..

படிங்க.. படிச்சிட்டு அழகாயிடுங்க....

எதுவா இருந்தாலும் லேடீஸ் பர்ஸ்ட் (போன் பண்றத தவிர்த்து... ) அதனால முதல்ல அவுங்கள அழகுபடுத்திட்டு அப்பறம் பாய்ஸ் உங்ககிட்ட வரேன் என்ன ஓகே வா...

எந்த டிரெஸ்ஸ போடறது ? இந்த டிரஸ் என் கலருக்கு எடுப்பா இருக்குமா ? இந்த டிரெஸ்ஸ போட்ட குண்டா தெரிவேனோ ? இப்படியெல்லாம் யோசிக்கற உங்களுக்காகத்தான் இந்த டிப்ஸ் டிப்ஸ் ...

நீங்க அழகா இல்லன்னாலும் பரவல்ல ..... நீங்க அணியற ஆடைகள் மூலமா உங்கள அழகா காட்டிக்க முடியும்... ஆள் பாதி ஆடை பாதின்னு கேள்வி பட்டிருப்பீங்களே ...அதேதான்...

நீங்க குள்ளமா இருந்தாலும் நீங்க போடற டிரஸ் மூலமா உங்கள உயரமா கட்ட முடியும் ..

சரி இப்ப நீங்க ஸ்கர்ட்( அதாங்க குட்டை பாவாடை ) போடறீங்கன்னா அதோட உயரம் சரியாய் முழங்கால் அளவுக்கோ அல்லது முழங்கால்க்கு கொஞ்சம் மேல இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.. அப்பதான் அது உங்கள உயரமா காட்டும்......

குர்தாஸ் போட்டாலும் அதே கண்டிஷன் தாங்க.. முழங்கால் அளவுக்கோ அல்லது அத விட கொஞ்சம் குறைவா போட்டீங்கின்னா கொஞ்சம் உயரமா தெரியலாம்...




அதோட டாப்ஸ் ஸ்லீவ்ஸ் ( அதாங்க கை உயரம்) வந்து முழங்கை வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க ..... இப்ப நீங்க ஸாரீ கட்டறீங்கன்னா கண்டிப்பா ஹை ஹீல்ஸ் போடுங்க......
மேல இருந்து கீழ வர மாதிரி(டிரஸ் முழு உயரத்துக்கும்) கோடுகள் இருக்கற ட்ரெஸ் டிசைன் செலக்ட் பண்ணி போட்டீங்கின்னா உயரமா தெரியலாம்..உயரமா தெரியறோம்னு கவலப்படரவங்களுக்காக அடுத்த டிப்ஸ் டிப்ஸ் ......நீங்க போடற ஸ்கர்ட் உயரம் நுனிக்கால் அளவு வரையும் இருக்கறதா தவிர்த்துடுங்க...

கணுக்கால் அளவு வரையும் இருந்தா உயரம் குறைவா தெரியும்..
நீள் வாக்கில் கோடுகள் இருக்கற மாதிரி இருக்கற குர்தாஸ் வகைகள தவிர்த்துடுங்க..
டிரஸ்ல பெரிய பெரிய டிசைன்ஸ் இருக்கற மாதிரி அல்லது ட்ரெஸ் முழுவதும் டிசைன் இருக்கற மாதிரி போட்டீங்கின்னா உயரம் குறைவா தெரியும்..
இப்படி செய்யும் போது கொஞ்சம் உயரம் குறைவா தெரியும்...

சரி இப்ப குண்டா இருக்கோம்னு கவலை படறவங்களுக்காக டிப்ஸ் டிப்ஸ் ..
பொதுவா குண்டா இருக்கறவுங்க கருப்பு நிற ஆடைகள் அணியறது நல்லது.. அப்பதான் கொஞ்சம் ஒல்லியா தெரியலாம்...



பெரிய பெரிய டிசைன்ஸ் போட்ட துணி வகைகள தவிர்த்துடுங்க ...

அகல வாக்குல கோடுகள் இருக்கற மாதிரி டிரஸ் போடாதீங்க....
உடம்ப இருக்குனா மாதிரி துணிகள் போடதீங்க அது உங்கள ஒல்லியா காட்டாது .... கேதேரிங், ப்ளீட்ஸ் வெச்ச மாதிரி ஆடைகள் அணிஞ்சா நல்லா இருக்கும் ....
அடுத்து ஒல்லியா இருக்கோம்னு நெனைக்கரவுங்களுக்காக டிப்ஸ் டிப்ஸ் ..
நீங்க முழு நீள ஆடைகள் அணிஞ்சா நல்லது...அதாவது முழுக்கை வெச்ச மாதிரி ஆடைகள் ...
பெரும்பாலும் காட்டன், அல்லது வெல்வெட் துணி வகைகள அணிஞ்சா கொஞ்சம் குண்டா தெரியலாம்..

உடம்போட ஒட்டின மாதிரி துணிகள் போடாதீங்க .... கொம்சம் தொல தொலனு போடுங்க அப்பத்தான் நல்லா இருக்கும் ..

ஸ்லீவ் லெஸ் ஆடைகள் அணியாதீங்க ....
லேடீஸ் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் மேக் அப் குறைவா போடுங்க... அதுவும் அந்தந்த டிரஸ்கு ஏத்த மாதிரி போடுங்க அப்பத்தான் அழகா தெரிவீங்க .......
என்னதான் சொல்லுங்க பெண்கள சேலையில பாக்கற அழகே தனி ...... என்னங்க நான் சொல்றது சரியா ....











பொதுவாவே பெண்கள் தான் டிரஸ் செலக்ட் பண்ண ரொம்ப நேரம் எடுத்துக்கறாங்க ...


ஆண்களுக்கென்ன ஒரு ஜீன்ஸ் பேண்ட்டும் ஒரு டி ஷர்ட்டும் எடுத்தா போதும்னு சொல்லுவாங்க... ஆனா அப்படி இல்லீங்க ஆண்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்றதில ரொம்ப கஷ்டம் இருக்கு...
வாங்க அது என்ன கஷ்டம் அத எப்படி சுலபமாக்கலாம்னு பாக்கலாம்...
பொதுவாவே எல்லா கடைகளிலும் ப்ரீ சைசுனு ஒன்னு வெச்சுருப்பாங்க .. ஆனா அதெல்லாம் நம்ம சத்யராஜ் உயரத்துக்கோ அல்லது அவர் மகன் சிபி உயரத்துக்கோ தாங்க இருக்கும்....
அப்ப செந்தில் சார் மாதிரி (உயரத்திலும் உடம்பிலும் )இருக்கறவங்க எல்லாம் எத போடறது
கொஞ்சம் குள்ளமா இருக்கற நீங்க ஜீன்ஸ் பேன்ட் போடும் போது அதோட உயரம் உங்க காலணியோட(அதாங்க ஷூ ) நுனி வரைக்கும் இருக்கற மாதிரி போடுங்க அப்பதான் உயரமா தெரிய முடியும்...
குள்ளமா இருக்கறவங்க எந்த கலர்ல பேன்ட் போடறீங்களோ அதே கலர்ல ஷூஸ் போடுங்க ... அப்ப கொஞ்சம் உயரமா தெரியலாம்....
உயரமா இருக்கறவுங்க தொள தொளனு இருக்குமே(அதாங்க கார்கோ ) அந்த பேன்ட் போடுங்க அப்பத்தான் உயரம் குறைவா தெரிவீங்க....
ஷார்ட் ஸ்லீவ்ஸ் போடுங்க அதனால உயரம் கொஞ்சம் குறைவா தெரியும்....

நீங்க போடற காலணியும் உங்க டிரஸ் கலர்லையே போடாதீங்க வேற கலர்ல போடுங்க ,, அப்பத்தான் உயரம் குறைவா தெரியும்....

முதலாவது .....
நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்க உடம்புக்கு தகுந்த மாதிரி போடுங்க... ரொம்ப லூசா , இல்லனா ரொம்ப இறக்கமா போடாதீங்க..
நீங்க போடற டிரஸ் உங்க உடம்ப ஒட்டின மாதிரி அதே நேரம் இறுக்காத மாதிரி போடுங்க ..
இறுக்கமா டிரஸ் போடனும்னா கரக்டான உடலமைப்பு வேணும் (அதாங்க ஸ்ட்ரக்ச்சர்) வேணும்....


அப்பதான் ஒரு சரியான லுக் குடுக்கும் .....




இரண்டாவது ....

ரொம்ப சிம்பிளா டிரஸ் போடுங்க.... உங்க டிரஸ்ல மூணு கலருக்கு மேல இருக்காம பாத்துக்கோங்க .. இல்லனா அது உங்கள பேண்டு வாத்தியக்காரன் மாதிரிக்காட்டும் ....

மூன்றாவது..
ரொம்ப சிம்பிளா அதே நேரம் ஸ்டைல்லாவும் தெரியனும்னா என்னோட சாய்ஸ் ப்ளாக் ஜீன்ஸ் தாங்க .....கோடுகள் போட்ட மாதிரி டாப்ஸ் போட்டீங்கின்னா அழகா தெரியும் ...

நான்காவது...
இப்ப ஆபீஸ் போறவங்களா இருந்தா வாரத்தின் ஐந்து நாட்கள்ல , நான்கு நாட்கள் கேசுவல்ஸ் தான் போடணும்....

கேசுவல்ஸ் போட்டு போட்டு போர் அடிச்சு போயிருக்கும்.. வேற ட்ரெஸ்ஸும் போட முடியாது.. அப்ப நீங்க என்ன பண்ணனும்னா கேசுவல்ஸ்லையே நெறைய வெரைட்டி கடைகள்ள கெடைக்குது..

அதாவது காலர்ல மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கழுத்துகிட்ட மட்டும் டிசைன் பண்ணின மாதிரி கிடைக்கும்.. அத ட்ரை பண்ணுங்க..



பொதுவா கலர் குறைவா இருக்கறவங்க எப்போதும் டார்க் கலரா போடாதீங்க.. ரொம்ப லைட் கலரும் போடதீங்க... இடைப்பட்ட மாதிரி போட்டீங்கின்னா கலர் குறைவா தெரிய மாட்டீங்க ....


ஐந்தாவது ....
இப்ப இருக்கற யூத்ஸ் அதிகமா காலர் இல்லாத டிரஸ் தான் அதிகமா உபயோகிக்கறாங்க ..

ஆனா காலர் இல்லாத டிரஸ் விட காலர் வெச்ச ஷர்ட் தாங்க உங்கள குண்டா அதாவது கொஞ்சம் அழகா கட்டும்.. சோ ஒல்லியா இருக்கறவங்க காலர் உள்ள டிரஸ் ட்ரை பண்ணுங்க ...
ஆறாவது ...

நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் கண்டிப்பா இன்னர் (அதாங்க பனியன்)போடுங்க ....
இன்னர் போடறதால ரெண்டு பயன் இருக்குங்க ...
ஒண்ணு கரக்டான ஷேப் கொடுக்கும்...ரெண்டாவது வியர்வை, உடம்பில உண்டாகுற எண்ணெய் இதெல்லாத்தையும் உறிஞ்சிக்கும் .. நீங்க எப்போதும் புத்துணர்ச்சியா இருக்கற பீலிங் குடுக்கும்...

ஏழாவது ....



பொதுவா ஜீன்ஸ் போடும் போது வி நெக், யு நெக், ஷர்ட்ஸ் போடாதீங்க அது அவ்வளவு எடுப்பா இருக்காது...


எட்டாவது....
குண்டா இருக்கறவங்க லூஸ் ஷர்ட்ஸ் போடுங்க.. இல்லன்னா கருப்பு நிறத்துல டிரஸ் போடுங்க ... இது கொஞ்சம் உங்கள ஒல்லியா காட்டும்...
ஒல்லியா இருக்கறவுங்க ஜீன்ஸ் ஷர்ட்ஸ் உபயோகிங்க அது உங்கள குண்டா காட்டும்...

ஒன்பதாவது...
உங்க டிரஸ்கு ஏத்த ஹேர் ஸ்டைல்லும் முக்கியம்... நீளமா முடி வளத்தரதுதான் இப்ப பேஷன் ..
ஆனா அது உங்களுக்கு பொருத்தமா இருக்கானு பாக்கணும்... பொருத்தம் இல்லைனா தயவு செஞ்சு அந்த மாதிரி ஹேர் ஸ்டைல் அவாய்ட் பண்ணிடுங்க.....



எப்போதும் ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவாதீங்க... தூக்கின மாதிரியும் சீவாதீங்க.....

ஒரே மாதிரி வகிடு எடுத்து சீவினா சீக்கிரம் முடி கொட்டிடும்... அப்பறம் நான் அடுத்த போஸ்ட்ல சீக்ரமா முடி வளர்ப்பது எப்படின்னு போஸ்ட் போட வேண்டியது வரும்... அந்த நெலைமைக்கு என்ன ஆளாக்கிடாதீங்க பாஸு....
வகிடு மாத்தி மாத்தி எடுங்க அப்பதான் முடி கொட்டாது.. பொண்ணுகள பாக்கும் போதும் கோதி விட்டு ஸ்டைல் பண்றதுக்கும் வசதியா இருக்கும்....

பத்தாவது..
இது ரொம்ப முக்கியம்... உடலமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் ) .... நீங்க எந்த டிரஸ் போடறதா இருந்தாலும் உங்களுக்கு பொருந்தினாதான் அழகே... அப்படி பொருந்துனும்னா கரக்டான உடலமைப்பு வேணும்...
அதுக்கு என்னங்க பண்றது... கண்டிப்பா தொப்பைய குறைச்சுடுங்க.. நல்லா எக்சர்சைஸ் பண்ணுங்க.... நீங்க என்னதான் டிரஸ் பண்ணாலும் ஆரோக்யமா இருந்தாதான் அழகே....

என்னங்க நான் சொல்றது சரியா ......

4 comments:

  1. பெண்களோ, ஆண்களோ மனதில் அன்பும் நடத்தையில் பணிவும் இருந்தாலே போதும் அழகு தன்னாலேயே வந்துவிடும் சரவணா .
    இதனை நாம் உணர்ந்துகொள்வதே இல்லை.
    அதுசரி, ஆடிக்கு ஒரு பதிவு இனி அடுத்த ஆடிக்கு இன்னொரு பதிவு . நம்ம மாப்ள யூர்கன் கூட இப்படித்தான்.புனேயில் ஆணி ரொம்ப அதிகமோ?!

    ReplyDelete
  2. ப்ரண்ட்ஸ் படத்தில் ஒரு வசனம் வரும்.
    சார்லி-ஆணியில் தேவையான ஆணி தேவையில்லாத ஆணி எப்படி கண்டுபிடிப்பது?
    வடிவேலு-நீ புடுங்குவது எல்லாமே தேவை யில்லாத ஆணிதான்...
    டேய்...டேய்..நீ சும்மா இரு....ஆணியே புடுங்க வேண்டாம்.
    //ஆடிக்கு ஒரு பதிவு இனி அடுத்த ஆடிக்கு இன்னொரு பதிவு . நம்ம மாப்ள யூர்கன் கூட இப்படித்தான் புனேயில் ஆணி ரொம்ப அதிகமோ?//
    அதான் சரவணன் சார் பதிவு எழுதிவிட்டாரோ?
    பதிவு அருமைசார்..நீண்ட கட்டுரை...ரொம்ப சிரமப்ட்டு எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. இது ஆளோட குத்தமில்ல....
    R&D ல வேல பாத்தா....
    இப்டித்தான் அல்லாத்தையும்
    ஆராய்ச்சி பார்வையே
    பாக்கசொல்லும் மன்சு.

    ReplyDelete
  4. //கக்கு - மாணிக்கம் said... //
    புரிந்தவர்களுக்கு நீங்கள் சொன்ன வார்த்தை பொருந்தும்...
    புரியாதவர்களுக்கு நான் சொல்லும் வார்த்தை பொருந்தும்....
    எப்பூடி.....
    //வேலன். said... //
    வேலை நேரத்தில் எழுதுவதால் இவளோ தாமதங்கள்..
    கடமைக்கு பின் தான் மற்றது எல்லாம் (பொண்டாட்டி, பிள்ளை கூட...)
    வேலை பளு இப்ப கொஞ்சம் அதிகபடியால் அப்பிடி.....
    இல்லை என்றால் அப்ப அப்ப வரும் எனது பதிவுகள்.........
    //வார்த்தை said... //
    ரொம்ப ரொம்ப யோசிச்சால்/ஆராய்ச்சி பண்ணினால் தான் R&D ல.. இருக்க முடியும்...
    அதனால் தான் இப்பிடி....

    கருத்து சொன்ன மக்கள் அனைவருக்கும்
    நன்றி......
    நன்றி....
    நன்றி..

    ReplyDelete